Breaking
Mon. Nov 25th, 2024

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாது­காப்­பினை குறைக் கும் சூழ்ச்சித் திட்­டத்தின் பின்­ன­ணியில் இந்­தியா மற்றும் மேற்­கு­லக சக்­தி­களே உள்­ளன. எனவே, மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கோ அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்­பட்டால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனிப்­பட்ட ரீதியில் பொறுப்புக் கூற வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹே­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடு­களின் பிரி­தி­நி­திகள் அண்­மையில் திரு­கோ­ண­மலை முகா­மிற்குள் அத்­து­மீறி நுழைந்­துள்­ளனர். இதனை விட ஒரு பெரிய அவ­மானம் நாட்­டிற்கு இல்லை . மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி காலத்தில் இந்­தி­யாவின் அச்­சு­றுத்­தல்­க­ளையும் மேற்­கு­ல­கத்தின் அழுத்­தங்­க­ளையும் தாண்டி புலி­களை அழித்தோம். அந்த புலி­க­ளுக்கு சிங்­கத்தை வேட்­டை­யாட சந்­தர்ப்பம் அழிப்­ப­தா­கவே பாது­காப்பு குறைப்பு காணப்­ப­டு­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று வௌ்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கூட்டு எதிர் கட்­சியின் ஊடக சந்­திப்பில் கலந்துக் கொண்டு உரை­யாற்றும் போதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹே­லிய ரம்­புக்­வெல்ல மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாது­காப்பு குறைப்பு விவ­காரம் தொடர்பில் அர­சாங்கம் பல்­வேறு கார­ணங்­களை கூறி வரு­கின்­றது. ஏனைய தலை­வர்­களை போன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை குறிப்­பிட முடி­யாது . ஆசிய வல­யத்தை எடுத்துக் கொண்­டாலும் மஹிந்த ராஜ­பக்ஷ முக்­கி­ய­மான தலைவர் . சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்­க­ளுக்கும் புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்கு அச்­சப்­பட்டும் பாது­காப்பை குறைத்­த­மை­யா­னது மிகவும் மோச­மான நிலை­யாகும் . ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் ஆட்சி காலத்தில் விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ராக போர் தொடுக்­கப்­பட்ட போது இந்­தியா கடு­மை­யாக அச்­சு­றுத்­தி­யது. வானில் பருப்பு போன்­ற­வற்றை போட்டு இலங்­கையின் இறை­யான்­மையை மீறி­யது. அது போதாது என்று இரா­ணு­வத்தை அனுப்­பு­வ­தற்கு முன்னர் போரை நிறுத்­து­மாறு கூறி இந்­தியா அச்­சு­றுத்­தி­யது. இத­னை­ய­டுத்து விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ரான போர் நிறுத்­தப்­பட்­டது.

இவ்­வாறு இலங்­கையை ஆட்சி செய்த ஜனா­தி­ப­தி­க­ளுக்கு எதி­ராக சர்­வ­தேச தலை­யீ­டுகள் காணப்­பட்­டது. ஆனால் அனைத்து சவால்­க­ளையும் எதிர் கொண்டு மஹிந்த ராஜ­பக்ஷ மாத்­தி­ரமே விடு­தலை புலி­களை அழித்தார். அதற்­காக இன்று அவரை ஆட்­சியில் இருந்து தூக்கி எறிந்து விட சர்­வ­தேச சதி செய்­தது. தற்­போது அவ­ரது பாது­காப்பும் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இதனை வன்­மை­யாக கண்­டிப்­ப­தோடு மிகவும் இழி­வான செய­லா­கவே கரு­து­கின்றோம். நாட்­டிற்­காக பல தியா­கங்­களை செய்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு புலி ஆதரவாளர்கள் லண்டன் விமான நிலையத்தை விட்டு வௌியே செல்ல அனுமதிக்க வில்லை .அவ்வாறான செயல்களை மக்கள் மறந்து விட வில்லை எனவே மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து இழிவான அரசியலை செய்ய வேண்டாம் என குறிப்பிட்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *