பிரதான செய்திகள்

மஸ்தானுக்கு பிரதி அமைச்சு! இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல்

காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, காதர் மஸ்தானுக்கு வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இங்கு முஸ்லிமொருவருக்கு எவ்வாறு, இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவியை வழங்க முடியும். நல்லாட்சியில் ஒரு இந்துவும் இல்லையா குறித்த அமைச்சு பதவியை வழங்குவதற்கு.

இந்த செயற்பாடு இந்துக்களை கொச்சைப்படுத்தும் அவமானப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது. இதனை எந்தவொரு இந்துவும் அனுமதிக்க முடியாது.

இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களின் எதிரப்பையும் சந்திக்க நேரிடும்.
இதேவேளை, காதர் மஸ்தானும், நானும் இயல்பாகவே நல்ல நண்பர்கள். எனக்கும் அவருக்குமிடையில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.

இவ்வாறு முஸ்லிம் ஒருவருக்கு இந்து விவகாரம் தொடர்பில் ஒரு அமைச்சுப்பொறுப்பை வழங்கினால் இந்துக்கள் இந்த விடயத்தை எவ்வாறு நோக்குவரென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விரைவில் நான்கு திமிங்கில அமைச்சர்கள் கைதுசெய்யப்படலாம்.

wpengine

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார்

wpengine

மலேசியா கோலாலம்பூர் பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு கெம்பஸுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்து.

wpengine