Breaking
Sun. Nov 24th, 2024

(சப்றாஸ் வவுனியா)

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேரடி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை மாலை தோன்றிய வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் எம் பியின் முக்கிய பிரச்சினையாக “மஸ் (இறைச்சி)” ஆகவே இருந்தது.

அரசியல் கூத்தாடியும் ஊடகக் கூத்தாடியுமான ரங்காவின் நேரடி நெறிப்படுத்தலில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஸ்தான் எம் பி தனக்கு வழங்கப்பட்ட அத்தனை நேரத்தையும் மாட்டிறைச்சியிலேயே கழித்தார்.

முஸ்லிம் சமூகத்திற்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது அவற்றையெல்லாம் தொடாமல் தான் ஒரு ”மாட்டிறைச்சி வியாபாரி” என்றும் தனது பரம்பரைத்தொழில் ”மாட்டு வியாபாரம்” என்றும் கூறி பெருமிதம் அடைந்தார். தனது வாழ்க்கையிலே முதன்முறையாக தொலைக்காட்சி ஒன்றில் தோன்றியிருந்த அவரை கூத்தாடி ரங்கா பிழையாக வழி நடாத்தி தனது நோக்கத்தை நிறைவேற்ற முயன்றதாகவே மக்கள் கருதுகின்றனர்.

அரசியலில் நுனிப்புல் மேயும் ரங்கா, ரிஷாட் பதியுதீனை கேவலப்படுத்துவதிலே குறியாக இருப்பவர். கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் கோடரிக்காம்பான ஹுனைஸ் பாரூக்கை மின்னலுக்கும் வேறு நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து ரிஷாட் பதியுதீனை எப்படியெல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் கேவலப்படுத்தினார். இதனால் பொறுமையிழந்த ரிஷாட் அலரி மாளிகையில் வைத்து ரங்காவை ஓட ஓட விரட்டி அடித்தார். இவைகள் கடந்த கால சம்பவங்கள். இப்போது மீண்டும் ரங்கா தனது குரங்குப்புத்தியைக் காட்ட புறப்பட்டிருக்கின்றார். அவரது வலையில் மஸ்தான் எம்பியும் சிக்கியுள்ளது தான் வேதனையானது.

தனது இறைச்சித் தொழிலுக்கு சிறுபான்மைக் கட்சி ஒன்றின் பெரும்பான்மை உறுப்பினர் ஒருவர் தடையாக இருப்பதாக மஸ்தான் எம் பி கூறிய போது, அது எப்படி சிறுபான்மைக் கட்சியில் பெரும்பான்மை உறுப்பினர் இருப்பர் என்ற ரங்காவின் கேள்வி அவரது அரசியல் சூனியத்தை வெளிப்படுத்துகின்றது.

நிகழ்ச்சியின் பல தடவைகள் “ஷொப்பிங் பேக்குடன் வந்தவர், வந்தவர்” எனக்கூறும் ரங்கா, ஹுனைஸ் பாரூக், முன்னர் மருதானை ஜும்மா மஸ்ஜித் ரோட்டில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்ததையும் எம் பி ஆன பின்னர் தனக்கு வழங்கிய சுக போக வாகனத்தை விற்று பொரளையில் எப்படி வீடு வாங்கினார் என்ற விடயத்தையும் கேட்க மறந்து விட்டார்.

முழுக்க முழுக்க செட் பண்ணி தயாரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அப்பாவி மஸ்தான் வீணாக மாட்டியிருக்கிறார். முஸ்லிம் சமூகம் அவரைப் பற்றிக் கொண்டிருந்த அத்தனை நம்பிக்கைகளும் இந்த நிகழ்ச்சியினால் தகர்த்தெறியப்பட்டதுடன் முஸ்லிம் சமூக அரசியல்வாதிகளை முட்டி மோதவிடும் ரங்காவின் வலைக்குள் மஸ்தான் எம்பியையும் விழுத்தும் ஆரம்ப முயற்சியாகவே இதை மக்கள் நோக்குகின்றனர்.

சிலாவத்துறை, முள்ளிக்குளம் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஹுனைஸ், வில்பத்துக் காட்டுக்குள் முஸ்லிம்கள் வாழைத்தோட்டம் வைத்துள்ளதாகவும் யானைகளை சுட்டு வீழ்த்துவதாகவும் காட்டை அழிப்பதாகவும் பொதுபலசேனாவுக்கு தகவல் கொடுத்தவர். ரிஷாட்டின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்வே அவர் இவ்வாறு கேவலமாக நடக்க காரணம் என்பது நன்கு புரிகின்றது.

முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சில் பணிப்பாளரிடம் பைல்களை தூக்கித்திரிந்தவர் இன்று முன்னாள் எம்பியாக தொலைக்காட்சியில் அமர்வதற்கும் பொரளையில் சொகுசு வீட்டில் வாழ்வதற்கும் யார் காரணமென்பது அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்.

ரங்காவைப் போன்றவர்கள் தமது கூத்தாடித்தனத்தை இன்னும் விடாமலிருப்பது தான் வேதனையானது. தாய்லாந்து பேச்சு வார்த்தை நேரத்தில் அன்டன் பாலசிங்கத்தின் அறைக்குள் அவர் அனுமதி பெறாமல் சென்ற போது பாலசிங்கத்தின் மெய்ப்பாதுகாவலர்கள் அவரது கழுத்தைப் பிடித்து தூக்கிய பின்னரும் அவர் திருந்தவில்லையென்றால் அவருக்காக பரிதாபப்படுவதை தவிர வேறுவழியில்லை.

இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு பின்னர் ஒரு மணிநேரம் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், முன்னாள் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ், முன்னாள் புத்தளம் நகர பிதா கே ஏ பாயிஸ் ஆகியோர் எவ்வாறான கருத்துக்களை முன்வைத்தார்கள் என்பது அடுத்த ஞாயிற்றுக்கிழமை நமக்குத் தெரியவரும். எனினும் ஹுனைஸ் பாரூக் எனும் நாகப்பாம்பு ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தனது விஷத்தை கக்கியிருக்கும் என்பதை மட்டும் உறுதியாக நம்பலாம்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *