பிரதான செய்திகள்

மலேஷியாவில் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – பிக்கு தாக்குதல்

மலேஷியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது, பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புத்ர வேல்ட் ரிரேட் சென்டர் முன்னால் கூடிய, சுமார் 50 பேர் அடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிந்துல் கோவிலுக்குள் மஹிந்த சென்றிருக்கலாம் என்ற வதந்தியினால், உள்ளே செல்ல முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, வௌியே வந்த தலைமை பௌத்த பிக்குவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரைத் தாக்கியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

பின்னர் அங்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், மலேசிய இந்திய முற்போக்கு சங்கத்தின் தலைவர் ஏ.இளங்கோவன், குறித்த பௌத்த பிக்குவிடம் நடந்த சம்பவத்தையிட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் கொலைக் குற்றவாளி ஒருவரை பௌத்த ஆலயத்துக்குள் அனுமதிக்கக் கூடாது எனக் கூறவே தாம் முற்பட்டதாகவும் இளங்கோவன் கூறியுள்ளார்.

அத்துடன் மலேஷியாவிலுள்ள பௌத்த விஹாரைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சென்ற மஹிந்த அங்கு சமய நிகழ்வுகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

Related posts

ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி – 8 பதக்கங்களுடன் சாதனை படைத்த இலங்கை!

Maash

கூட்டமைப்பின் சித்தார்த்தனுக்கு பதவி வழங்கி நாட்டினை பிளவுபடுத்துவதற்கு அரசு முயற்சி-தேசப்பற்றுள்ள தேசிய பிக்குகள் முன்னணி

wpengine

ஜனாதிபதியின் ராஜினாமாவும் அதனோடு தொடர்புபட்ட சட்டங்களும்- சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக சாத்தியமில்லை.

wpengine