Breaking
Sat. Apr 20th, 2024
(அபூ செய்னப்)
மலட்டுத்தனமான அரசியல் கருத்துகளை வைத்து மந்திரம் ஓதுகிறார் யோகேஸ்வரன் எம்.பி. இதற்கு காரணம் போதிய அரசியல் ஞானமும்,அரசியல் அனுபவமும் இன்மையாகும். நல்லாட்சி அரசிடம் ஒரு முகமும் தமிழ் மக்களிடம் இன்னொரு முகமும் என இரட்டை வேடம் தரித்து செயற்படும் இவ்வாறானவர்கள் பாராளமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபக்கேடான விடயமாகும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி,மீராவோடை கிழக்கு பிரதேசத்தில் தையல் பயிற்சியினை முடித்த யுவதிகளுக்கு சான்றிதழும் தையல் இயந்திரமும் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்

இந்த நல்லாட்சியின் பங்காளர்கள் நாங்கள் தான். நாங்களே இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என வீராப்பு பேசித்திரிகின்ற யோகேஸ்வரன் எம்.பி. போன்றவர்கள் பாதிக்கப்பட்டு நொந்து போயுள்ள இந்த தமிழ் சமூகத்திற்காக என்ன கைமாறினை செய்துள்ளார். இன்றைக்கும் சிறையில் வாடிக்கொண்டு இருக்கின்ற தமிழ்க் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க முடியாமலும்,தமிழ் பிரதேசங்களில் உள்ள காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாமலும், இந்த பிரதேச தமிழ் மக்களின் கல்விப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியாமலும் காலங்கடத்தி வருகிறீர்கள்.

அப்பாவி தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டி இந்தப்பிரதேசத்தையும், இந்த அப்பாவி மக்களையும் மீண்டும் ஒரு தரம் அழிவுக்குள்ளும்,அவலங்களுக்குள்ளும் தள்ள முனைகின்ற முள்ளமாறித்தனத்தை,நரித்தனத்தை தமிழ் இளைஞர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைமை பதவிக்காக கொழும்பிலே நாக்கை தொங்கப்போட்டு அலைந்தவர்கள் அந்தப் பதவியினை பெற்று வந்து இந்த மாவட்டத்தில் எந்த அபிவிருத்தியும் செய்யாமல், அபிவிருத்தி செய்யத்தெரியாமல் வெறுமனே வார்த்தைகளால் மட்டுமே அப்பாவி தமிழ் மக்களை சூடேற்றுகின்ற டம்மி பீசுகளாக இருக்கிறார்கள்.

இவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்து தமிழ் மக்களுக்கு ஒன்றும் நடக்காது காணிப்பிரச்சினை,கல்விப்பிரச்சினை,வேலைவாய்ப்பு என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற எந்தவிதமான அபிவிருத்திகளையும் இந்தப்பிரதேசங்களுக்கு கொண்டு வரும் திராணியும்,அரசியல் ஞானமும் இவர்களிடம் கிடையாது.
காலாதிகாலமாக இனவாதம் பேசி தமது பதவிகளை தக்க வைத்துக்கொள்ளவே இந்த அமீர் அலியை ஒரு இனவாதியாக காட்ட இந்த அரசியல் அனாதைகள் முனைகின்றன. நான் பகிரங்கமாக சொல்லுகின்ற விடயம் முஸ்லிம்கள் மாத்திரமன்றி தமிழ் சகோதரர்களுக்கும் எனக்கு வாக்களித்துள்ளார்கள் அவர்களுக்கு சேவை செய்வதையும்,தமிழ் பிரதேசங்களில் எனது அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதிலும் நான் முன்னின்று செயற்படுவேன்.
அந்த அப்பாவி மக்களுக்கு உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதற்காய் நாங்கள் செய்கின்ற நல்ல திட்டங்களை தடுப்பதன் மூலம் ஒரு கேவலமான அரசியல் முன்னுதாரணத்தை நீங்கள் பதிகின்றீர்கள்.
இனவாதம் பேசிப்பேசி மக்களை மடையர்களாக மாற்றி அவர்களின் வாக்குகளினால் நீங்கள் சுகபோகம் அனுபவித்த காலம் மலை ஏறிவிட்டது. யோகேஸ்வரன் எம்.பி போன்றவர்களின் நச்சுக்கருத்துக்கள் முஸ்லிம் தமிழ் இனமுறுகளுக்கு அடித்தளம் இடும் என்பதோடு இந்த நல்லாட்சியை குழப்பும் நோக்கத்தோடு இவர் செயற்படுவது புரிகிறது. இவரது மலட்டுத்தனமான அரசியல் போக்கு பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியில் இன்னுமொரு யுத்தத்தை உண்டு பண்ண யோகேஸ்வரன் எம்.பி முயற்சிக்கின்றாரோ என்ற எண்ணத்தை விதைக்கும் சாத்தியம் இருக்கிறது.
எனவே தமிழ் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட இனவாதம் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உள்ளத்தில் உள்ள துவேசம் நிறைந்த அழுக்குகளை அகற்றிவிட்டு இந்த மக்களின் நிம்மதியான,சந்தோசமான வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பதில் முன்னிற்க வேண்டும் மாறாக தமது இயலாமையை மறைக்க அடுத்தவனை குறை கூறித்திறிகின்ற அந்த நயவஞ்சகத் தனத்தை விட வேண்டும், என தெரிவித்தார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *