பிரதான செய்திகள்

மலசல கூடத்திற்கு பழியான மூன்று வயது அஷ்ரப் நகர் ஹிமாஸ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் நேற்று (27) காலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வந்த அடை மழை காரணமாக வீட்டின் ஓரமாக வெட்டப்பட்டிருந்த குழியில் நீர் நிரம்பியிருந்தது.

இந்நிலையில் அப்பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயதுடைய சவுறுதீன் ஹிமாஸ் அஹ்தி என்ற சிறுவன் குழியில் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் காணாது தேடிய போது அச்சிறுவன் வைத்திருந்த தடியொன்று நீரில் மிதப்பதை உறவினர் கண்டுள்ளனர்.

அக்குழியினுள் தேடிய போது சிறுவன் உயிரிழந்து சடலமாக காணப்பட்டதாக மரணமடைந்த சிறுவனின் குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.

மலசலகூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் நிர்மாணப் பணி இடம்பெறவிருந்த போதிலும் அடை மழை காரணமாக மலசலகூட நிர்மாணப் பணி பிற்போடப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Related posts

பிரபாகரன் விவகாரம் குறித்தும் விசாரணை – பாது­காப்பு இரா­ஜங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன

wpengine

இனவாதிகளுக்கு விக்கினேஸ்வரனே களம் அமைத்து கொடுக்கின்றார்

wpengine

சொகுசு வாகனம் கொள்வனவு செய்த ரவூப் ஹக்கீம்

wpengine