பிரதான செய்திகள்

மறிச்சுக்கட்டி பிரச்சினையினை வைத்து அமைச்சர் றிஷாட் பதியுதீனை பற்றி பிழையான தகவல்களை கொடுக்கின்றார்கள்- பா.உ நவவி

(எஸ்.எச்.எம்.வாஜித்)

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை ரத்துச்செய்ய கோரி நேற்று (9) காலை புத்தளம்  மாந்தை மற்றும் பெற்கேணி  போன்ற பிரதேசங்களில்  இருந்து வருகை தந்தோர் மறிச்சுக்கட்டி பகுதியில் வைத்து 14வது நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  மறிச்சுக்கட்டி மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்தி உள்ளார்கள்.

இந்த  நிகழ்வில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர்  நவவி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

மக்களின் பிரச்சினையினை திசை திருப்பும் நோக்குடன் சில வங்குரோத்து அரசியல்வாதிகளும் இனவாத சிந்தனை கொண்டோரும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடைய பிரச்சினையாகவும் அவர் 650க்கு மேற்பட்ட அரச காணிகளை தன்வசம் வைத்துள்ளதாகவும் போலியான தகவல்களை சில பெரும்பன்மை சமுகத்தில் பரப்புகின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படி சிந்தனை கொண்ட பெரும்பான்மை  இனத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரை சந்தித்த போது அந்த அரசியல்வாதியும் அமைச்சரை பற்றி பிழையான சிந்தனைகொண்டு இருந்த போது அதில் இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ள 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தோம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஒரு துண்டு காணியினை  பிடித்து இருக்கின்றார். என்று யாராவது நிருபித்துக்காட்டுங்கள் உடனே! நாங்கள் 5பேரும் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜனமா செய்ய தயார் என்று சவால் விட்டுவிட்டு வந்தோம்.

இந்த பிரச்சினை முசலி மக்களுடைய பிரச்சினை அல்ல இது முழு நாட்டு முஸ்லிம்களுடைய பிரச்சினை இதனை பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து பேச இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்  றிப்கான் பதியுதீன் மாந்தை உப்பு நிலையத்தின் தலைவர் அமீன் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் பீட பேராசிரியர் கலாநிதி அனிஸ் மற்றும் முன்னால் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் சனூஸ் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ரங்காவின் மின்னலும் பின்னலும்

wpengine

வடக்கு கிழக்கு ஆயர் பேரவையின் பின்னால் வேறு ஏதும் சக்திகள் இயங்குகின்றதா ?

wpengine

கிழக்கின் எழுச்சி ஒரு பிரதேசவாதம் அல்ல! எமது விதியை நாமே! எழுதுவோம்

wpengine