உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸ்..!

இங்கிலாந்து நாட்டின் மன்னர் சார்ள்ஸ் (வயது 76). கடந்த ஆண்டு இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புற்றுநோயின் பாதிப்பு தீவிரமடைந்தது.

எனவே பரிசோதனைக்காக அவர் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் கலந்து கொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற பரிசோதனைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். எனினும் தொடர்ந்து அவர் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

  மன்னர் சார்ள்ஸ் ,கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பொதுப்பணியில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய குடியுரிமை பெறும் மலாலா

wpengine

நிர்வாணமாக உணவு வழங்கும் ஜன்னலின் ஊடாக தப்பிய நபர் பரபரப்பு (வீடியோ)

wpengine

முகத்தை மறைப்பதற்கு தடை – பாராளுமன்றம் ஒப்புதல்

wpengine