(றசீன் றஸ்மீன்)
மன்னார் மாவட்டத்தின் முசலி மக்கள் வாழ்ந்த பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய வர்த்தமானியில் கையொப்பம் இட்டதை அடுத்து, குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்துவரும் முல்லைத்தீவு முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.