(அபு ரஷாத்)
இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு நேரிய வழியை தனதுயிரை இழந்து காட்டிய மர்ஹூம் அஷ்ரபை இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிடுவார்களாக இருந்தால் அவர்களைப் போன்ற துரோகிகள் யாருமில்லை என்று தான் கூற வேண்டும்.
தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் பெயரிலே வெளியிடப்பட்ட நூலில் மறைந்த மாமனிதர் அஷ்ரபும் அவருடைய குடும்பமும் பாதிக்கப்பட்ட விடயம் தெட்டத் தெளிவாக நிரூபணமாகியுள்ளது.அது பற்றி வெளியிடப்பட்ட குற்றச் சாட்டுக்களுக்கு அதன் சொந்தக்காரர்கள் சிறிதும் வாய் திறக்கவில்லை.
சிந்தித்து பாருங்கள்.!
இது பற்றி யார் கேள்வி எழுப்புவது? எமக்காகத் தானே அவர் உயிர் துறந்தார்.அது பற்றி கேட்பது எம் மீது கடமையல்லவா? இவ்விடயமாக ஒருவராவது ஏதாவது செய்துள்ளோமா? எம்மை விட துரோகிகள் இந்த சமூகத்தில் யார் இருக்க முடியும்.
இந்த துரோகங்களை பார்த்து கேள்வி கேட்க முடியாதென்றால் இந்த சமூகத்தை நம்பி ஒரு சமூகப் பற்றாளன் தைரியமாக எப்படி கால் வைக்க முடியும்? எங்கே அஷ்ரபோடு தைரியமாக நடைசென்ற புரட்சியாளர்கள்? இவர்களுக்கு நாம் புகட்டும் பாடம் எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.