உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழக முதல்வருக்கு வடக்கு முதல்வர் வாழ்த்து

( மயூரன் )

தமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவாகியுள்ளமைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

வருங்காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்வார் என எதிர்பார்கிறேன்.

தமிழ் நாட்டு மக்கள் மீண்டும் அவரையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளமை மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றது.

அதனால் தொடர்ந்து அவர் தமிழக மக்களுக்கும் ஈழத்து தமிழ் மக்களுக்கும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன் என அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

2025-ஆம் ஆண்டு ஆசியாவின் 10 மிகப்பெரிய பணக்காரர்கள் – முதலிடத்தில் இந்தியர்!

Maash

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடும் சந்தர்ப்பம்!

Editor

மட்டக்களப்பு பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு-22 திகதி ஏறாவூர்

wpengine