பிரதான செய்திகள்

மன்னார் வைத்தியசாலைக்கு செல்லுவோரின் கவனத்திற்கு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை மாலை நேரங்களில் பார்வையிடும் நேரம் இன்று மாலை முதல் நடை முறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய செந்தூர் பதிராஜா அறிவித்துள்ளார்.
நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஏப்பிரல் மாதம் 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பேருந்து போக்குவரத்து சேவையினையும் கருத்தில் கொண்டும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கியுள்ள நோயளர்களை மாலை நேரங்களில் பார்வையிடுவதற்கான நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிட வரும் உறவினர்களின் நலனை கருத்தில் கொண்டு மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பார்வையிட தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மாலை நேரத்தில் வழமையாக நோயளர்களை பார்வையிடும் நேரமான மாலை 5 மணி முதல் 6 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் தங்கி இருப்பவர்களை, உறவினர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பார்வையிட முடியும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி செந்தூர் பதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சம்பந்தன் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த மஹிந்த

wpengine

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் நாளை பாடசாலை விடுமுறை

wpengine

13ம் திருத்தம், தேர்தல் முறை இவற்றில் கைவைக்க ஒருபோதும் இணங்க மாட்டோம்

wpengine