பிரதான செய்திகள்

மன்னார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த வட மாகாண அமைச்சர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் இன்று பிற்பகல் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் மற்றும் அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யூட் ரதனி, மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அன்ரன் சிசில் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சகல பிரிவுகளினதும் தற்போதைய நிலை தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் நேரடியாக பார்வையிட்டதுடன், நீண்ட நாளாக காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை தரப்பிரனுடன் அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில்,
உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை வெகு விரைவில் தீர்த்து வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தரத்தையும், மேலதிக வசதிகளையும் உருவாக்குவதற்கான பெரிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசித்துள்ளேன்.

உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி உதவிகளை வழங்குகின்ற நாடுகளோடும், சுகாதார அமைச்சுடனும் தொடர்பு கொண்டு எதிர்வரும் காலங்களில் குறித்த திட்டங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கைத்ததொழில் வளர்ச்சிக்கென யுனிடோ நவீன கட்டமைப்பொன்றை செயற்படுத்துகின்றது அமைச்சர் றிஷாட்

wpengine

95 குழந்தைகளை பழி கொடுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி

wpengine

கடன் அட்டைக்கான வட்டிவீதம் அதிகரிப்பு! மத்திய வங்கி கட்டுப்படுத்தவில்லை

wpengine