பிரதான செய்திகள்விளையாட்டு

மன்னார்- வெள்ளிமலை கிரிக்கட் சுற்றுப்போட்டி ட்ரகன்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியன்

(ரூஸி சனூன்  புத்தளம்)

மன்னார் வெள்ளிமலை விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு 11 பேர்களை கொண்ட 08 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட சுப்பர் லீக் கிரிக்கட் போட்டி தொடரில் புத்தளம் நகரின், பல வெற்றிகளை தனதாக்கி சம்பியன் கிண்ணங்கள் பலவற்றை குவித்த ட்ரகன்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது.

இந்த பிரமாண்டமான கிரிக்கட் போட்டி தொடரானது கடந்த வெள்ளிக்கிழமை (14) தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (16) வரைக்கும் மன்னார் சிலாபத்துறை வெள்ளிமலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து மொத்தமாக 32 கிரிக்கட் கழகங்கள் இந்த போட்டி தொடரில் பங்கேற்றன.

விலகல் முறையிலான இந்த போட்டி தொடரின் இறுதிப்போட்டியில் புத்தளம் ட்ரகன்ஸ் அணியும், கொண்டச்சி ஹமீதியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.நேர முகாமைத்துவத்தினை கருத்திற்கொண்டு இறுதி போட்டி 05 ஓவராக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொண்டச்சி ஹமீதியா அணி 05 ஓவர் நிறைவில் 04 விக்கட் இழப்புக்கு 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. வெற்றி பெறுவதற்கு 49 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு  துடுப்பெடுத்தாடிய புத்தளம் ட்ரகன்ஸ் அணி 3.2 ஓவர்களில் 01 விக்கட் இழப்புக்கு 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம் 10 விக்கட்டுகளினால் அவ் அணி வெற்றிபெற்று சம்பியனாகியதோடு கொண்டச்சி ஹமீதியா அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

தொடர் நாயகனாக புத்தளம் ட்ரகன்ஸ் அணியின் வீரர் தினேஷும், இறுதிப்போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக ட்ரகன்ஸ் அணியின் வீரர் நாசிக்கும் தெரிவாகினர்.

போட்டிக்கு நடுவர்களாக மன்னார் மாவட்ட கிரிக்கட் சபையை சேர்ந்த ஜூட், றொபின்சன் மற்றும் நிபாக் ஆகியோர் கடமையாற்றினர். வெள்ளிமலை விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.அஸ்ஹர், செயலாளர் நஸீர், பொருளாளர்  எஸ்.எம்.வாஜித் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் இணைந்து இந்த சுற்றுப்போட்டியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.14639864_1770506253200842_5036174555001158887_n

இறுதி போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார். மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், இலங்கை காரியவள கூட்டுத்தாபன நிறைவேற்று பணிப்பாளர் அலிகான் ஷரீப், பணிப்பாளர் ஜுனைஸ், மக்கள் வங்கியின் உதவி பணிப்பாளர் அமீர் மொஹிதீன் உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து கொணடனர்.14690972_1031077277017676_6787602433888547180_n

முதலாம்  இடத்தினை பெற்று சம்பியனான புத்தளம் ட்ரகன்ஸ் அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும், பதக்கங்களும், வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டன. இரண்டாம் இடம் பெற்ற கொண்டச்சி ஹமீதியா அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்துடன் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டன.14671126_10205817797243841_7672747371956250474_n

14716315_1770506306534170_4234658653274105851_n

Related posts

விமல் தலைமையிலான அணி ஆதரவு மீண்டும் இவருக்கு

wpengine

மடு புனித பிரதேசம்! ஜனாதிபதி செயலாளர் தலைமையில் கூட்டம்

wpengine

10 கட்சிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்

wpengine