பிரதான செய்திகள்

மன்னார் வலையக் கல்விப்பணிப்பாளர் செ.சுகந்தியின் விளையாட்டு! முசலி பிரதேச குழு கூட்டத்தில் வெளியில் வந்தது

முசலி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று மாலை 2மணியலவில் முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவர்கள் ஆன முதலமைச்சர் விக்னேஸ்வரன், மன்னார் மாவட்ட பாராளமன்ற உறுப்பினரும்  அமைச்சருமான  றிஷாட் பதியுதீன்,அதே மாவட்டதை சேர்ந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொள்ளாத நிலையில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன் போது நிகழ்ச்சி வரிசையில் வலைய கல்விப்பணிப்பாளரின் பதவியும் குறிப்பிடப்பட்ட வேலை பணிப்பாளர் சமூகம் அளிக்கவில்லை ஏன் வரவில்லை என்ற காரண விளக்கத்தை கோருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

அதன் பின்பு மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக முசலி பிரதேசத்தில் உள்ள சில பாடசாலைகளை தெரிவு செய்து அதற்கான அபிவிருத்தி வேலைகள் இடம்பெற உள்ள நிலையில் இந்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் முசலி கோட்டக்கல்வி பணிப்பாளரிடம் விளக்கம் கோரப்பட்ட வேலை நிங்கள் குறிப்பிடும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எனக்கு தெரியாது என்றும் இதனை யார் தெரிவு செய்து எனவும்,இந்த பாடசாலைகளை விட இன்னும் தெரிவு செய்யப்பட வேண்டிய பாடசாலைகள் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதன் போது பலர் கருத்து தெரிவிக்கையில் முசலி கோட்டக்கல்வி பணிப்பாளருக்கு தெரியாமல்,அறிவிக்காமல் தனது சுயநல தேவைகளுக்கு சில பாடசாலைகளை வலைய கல்விப்பணிப்பாளர் தெரிவு செய்து இருப்பது கண்டிக்கப்பட்ட வேண்டிய விடயம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கூறுகையில் உயர் அதிகாரிகள் மக்களுக்கு தெரியாமல்,பொருத்தம் இல்லாத வேலைத்திட்டங்களை தெரிவு செய்யக்ககூடாது எனவும் சமூக மட்ட அமைப்புகளை சந்தித்து அவர்களின் கருத்துகளை செவிமடுத்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

Related posts

மன்னார் தந்தை செல்வாவின் சிலைக்கு முன்னால் நிகழ்வு

wpengine

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது – சி.சிறீதரன்

wpengine

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடும் சந்தர்ப்பம்!

Editor