பிரதான செய்திகள்

மன்னார், முருங்கன் பகுதிகளில் நாளை நீர்வெட்டு

மன்னார், முருங்கன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நாளை மு.ப. 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணி வரையான 8 மணி நேர நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மன்னார் நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன் நீர்த்தாங்கிகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படும் நீர் பாய்ச்சும் குழாயில் திருத்தப்பணிகளை முன்னிட்டு நீர்வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தும்படி மக்களிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்  சபை கேட்டுள்ளது.

Related posts

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் – கைதான மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Maash

பயணத்தடை தொடர்பில் மீண்டும் புதிய நடைமுறை அத்தியாவசிய தேவைகள் எவை

wpengine

வர்த்தக அமைச்சர் 300கோடி நிதி மோசடி! அமைச்சர் அமரவீர

wpengine