பிரதான செய்திகள்

மன்னார்- முசலி பிரதேசத்தில் அதிகமான மாடுகள் களவு போகின்றது! உரிமையாளர்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் அதிகமான மாடுகள் களவு போகின்றது என மாட்டு உரிமையாளர்கள் அதிக கவலை தெரிவித்துள்ளார்கள்.

மேலும் தெரிவிக்கையில்

முசலி பிரதேசத்தில் தற்போது வரட்சி நிலை காரணமாக அதிகமான மாடுகள் அயல் கிராமங்களுக்கு செல்லுகின்ற வேலை சில மாட்டுகொள்ளையர்கள் காட்டு பகுதியில் சில மாடுகளை பிடித்துவைத்து இரவு நேரங்களில் மாட்டு விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்கின்றார்கள்.

இது முசலி பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது எனவும் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

கடந்த வாரம் கூட கூனைஸ் நகர் பகுதிக்கு மேச்சலுக்கு சென்ற அதிகமான மாடுகளை காணவில்லை என்றும் இதனுடன் சம்மந்தப்பட்ட ஒருவரை சிலாவத்துறை பொலிஸ் நிலைய அதிகாரியினால் கைது செய்யப்பட்டார் எனவும் அறியமுடிகின்றது.

Related posts

நேற்று மெக்ஸிக்கோவில் 6.2 ரிச்டர் பூமியதிர்ச்சி

wpengine

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் உடல் பங்களாதேஷ் எல்லையில்

wpengine

இனவாதத்தினை தூண்டும் வட மாகாண சபை! அமைச்சர் மஹிந்த அமரவீர

wpengine