பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்-முசலியில் முஸ்லிம் பராமரித்த காணியில் இந்து கோவில் அமைக்க முயற்சி

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மேத்தன்வெளி கிராம சேவையாளர் பிரிவில் சிலாவத்துறை பிரதான வீதியில் இருந்து மன்னார் செல்லும் வீதியில் பல வருடகாலமாக முசலி கிராமத்தை சேர்ந்த ரவூப் என்பவர் பராமரித்து வந்த காணியில் புதுகுடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு புதிய இந்து கோவில் ஒன்றினை அமைத்து கொடுக்க முசலி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அல்-மஹ்ரூப் ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் குற்றம் சுமத்தி உள்ளது.

இது தொடர்பில்  முசலி கிராமத்தை சேர்ந்த ரவூப் என்பவர் சுமார் 40வருடகாலமாக பராமரித்து வந்த காணியில் புதிய இந்து கோவில் ஒன்றை அமைக்க முசலி பிரதேச செயலகத்தில் உள்ள கலாச்சார உத்தியோகத்தர்,பிரதேச செயலகம் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,முதல் கட்ட வேலைக்கான “பவுண்டேசன் கற்கள்” இறக்கி உள்ளதாகவும், கோவிலுக்காக 1 ஏக்கர் காணியினை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிராம உத்தியோகத்தரை பிரதேச செயலகம் பணித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனை தடுத்து நிறுத்தக்கோரி இன்று காலை மேத்தன்வெளி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கடிதம் ஒன்றை பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.எனவும் அறியமுடிகின்றது.

ஒரு மாதத்திற்கு முன்பு மன்னார் மாவட்ட செயலகத்தினால் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டது.பிரதான வீதியில் எந்த சமயத்தவர்களும் மத அனுஷ்டானங்களுக்கு பிரதான வீதியில் சிலைகள்,கோவில்கள்,பள்ளிவாசல்கள் அமைக்க கூடாது. என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்துகளின் மக்களின் வழிபாட்டிற்காக முசலி பிரதேச செயலகத்தின் முன்னால் செயலாளர் கேதீஸ்வரன் அரச காணியில் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கோவில் ஒன்றினை அமைத்துகொடுத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் வன்னி அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் ஆன முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் றிஷாட்,பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கைவிடுக்கின்றார்.

Related posts

தமிழ்,முஸ்லிம் ஒற்றுமையாக வாழ வேண்டும்! இல்லையென்றால் காவி உடை தரித்தவர் நீதிபதியாக வருவார்கள்

wpengine

ஒன்றிணைந்த தொழிற்சங்க ஏற்பாளர் ஆனந்த பாலிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Editor

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஹிருணிகா ! சிறிது நேரத்திலேயே மீளப்பெறப்பட்டது.

Maash