பிரதான செய்திகள்

மன்னார், முசலியில் உயர்தர மாணவர்களுக்கான “சிப்தொர” புலமைப்பரிசில் வழங்கி வைப்பு!

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட சமுர்த்தி பெரும் குடும்பங்களுக்களைச் சேர்ந்த க.பொ.த சாதாரன தர பரீட்சையில் சித்திபெற்று க.பொ.த உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும்  மாணவர்களுக்கான சமுர்த்தி திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் “சிப்தொர” புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (15) முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சமுர்த்தி முகாமையாளர் பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்டான்லி டிமெல், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அலியார், வலய முன்பள்ளி பிரதிக்கல்விப்பணிப்பாளர் அஸ்லம், முசலி கோட்டக்கல்விப்பணிப்பாளர் உவைஸ்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் 106 மாணவர்களுக்கான “சிப்தொர” புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தளம் மாவட்ட கிராமங்களில் அ. இ. ம. காங்கிரஸ் கட்சி கிளைகள்

wpengine

களனிதிஸ்ஸ மின் நிலையம் இலங்கை மின்சார சபை வசமானது!

Editor

ஒரு லச்சம் குழந்தைகளை கொலை செய்ய ஆப்கானிஸ்தான் போராளிகள் குழுக்கள் முடிவு

wpengine