பிரதான செய்திகள்

மன்னார் மீனவர்களுக்கு சந்தோஷமான செய்தி

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் செயற்படுத்துகைக்கு அமைவாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின்  நிதி உதவியுடன் உலக உணவு விவசாய ஸ்தாபனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட  கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் தகவல் நிலையத்தினை  இன்று வைபவ ரீதியாக கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கைத்தொழில் பணிப்பாளர் நிகால் பாலித திறந்து வைத்தார்.

 

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கைத்தொழில் பணிப்பாளர் நிகால் பாலித, உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் திட்ட பணிப்பாளர் எஸ்.சுதர்மன், மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள்  என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காப்புறுதி செய்திருந்த மீனவர் ஒருவர் கடலில் உயிரிழந்த நிலையில் அவரது மனைவிக்கு காப்புறுதி பணம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம்

wpengine

ஜனவரி மாதம் முதலாம் திகதி 4000 ரூபா விசேட கொடுப்பனவு

wpengine

என்னோடு கைகோர்த்து இணையுங்கள்; அர்த்தத்துடன், உருவாக்குவோம்! ஜனாதிபதி கோத்தா

wpengine