Breaking
Mon. Nov 25th, 2024

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் நேற்று மாலையுடன்கைவிடப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவி வைத்திய அத்தியட்சகர் ரி.ஒஸ்மன் டெனி தெரிவித்துள்ளார்.

 

கடந்த வியாழக்கிழமை காலை பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரி மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவங்களை கண்டித்து வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இதன்போது வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பை அதிகரித்தல், நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகிய மூன்று கோரிக்கைகள் வைத்தியர்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த கோரிக்கையை அமுல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.தற்போது மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கு அமைவாக நேற்று மாலை வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையும் மட்டுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை முதல் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெற்று வருவதாகவும், ஒரு வாரத்திற்குள் மேலதிக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *