பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இவர்களது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரினை குழாய் கிணறுகள் மூலம் பெற்றுக் கொள்ள தேவைாயன வசதிகளை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கையெடுப்பதன் அவசியம் தொடர்பில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் விவசாய அமைச்சர் துமின்த திசநாயக்க மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா ஆகியோரிடத்தில் வேண்டுகோளை முன் வைத்து கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு,மடு,நானாட்டான்,முசலி பிரதேச செயலகப் பிரிவில் வாழும்,பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக தமது தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,இதனால் பெறும் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்துள்ளதாகவும் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர வேண்டுகோள் கடிதத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில காலங்களுக்கு இந்த வரட்சி நிலை காணப்படுமெனில் பிரதேசத்தின் விவசாயிகள் முழுமையாக தமது விவசாயத்தை கைவிட நேரிட ஏற்படும் எனவும்,இந்த நிலையினை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் தங்களது அமைச்சுக்களின் கீழ் துரித செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சர்களை கேட்டுள்ளார்

மன்னார் மாவட்டடத்தில் பிரதான நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினாலும்,சில நீர் வடிகால் அமைப்புக்கள் துார்ந்துள்ள நிலையில் இதனை துரித கதியில் புனரமைப்பதன் மூலம் அடுத்த போக விவசாய செய்கையினை செய்வதற்கு இலகுவாக இருக்கும் என்றும் அமைச்சர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் துரிதமாக குழாய் கிணறுகளை நிர்மானிப்பதற்கு தமது கனவத்தை செலுத்துமாறும்,போதுமான அதிகாரிகளை இந்த பணிகளை மேற்பார்வை செய்ய நியமிக்குமாறும் அந்த கடிதத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டியுள்ளார்.

அதே வேளை மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் விவசாயிகளினதும்,விவசாய சங்கங்களினதும்,வேண்டுகோள் தொடர்பில் முன்னுரிமையடிப்படையில் நடவடிக்கையெடுக்குமாறும் தேவையேற்படின் அனர்த்த முகாமைத்துவ கூட்டத்தினை கூட்டி உரிய நடவடிக்கையெடுக்குமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டியுள்ளார்.

Related posts

மஹிந்த ஆட்­சி­யிலும் பொது­ப­ல ­சே­னா­வுக்கு பல­மாக இருந்­தவர் சம்­பிக்க ரண­வக்க -ஹாபிஸ் நசீர்

wpengine

இனிமேல் நடந்தால் உங்களுக்கு உதவமாட்டோம்! ஜனாதிபதிக்கு முக்கிய நாட்டு பிரதிநிதி முகத்துக்கு சொன்னார்.

wpengine

மியன்மார் அகதிகளுக்கு வேறொரு நாட்டில் புகலிடம்

wpengine