பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட விளையாட்டு போட்டி அரிப்பு பாடசாலை மைதானத்தில்

(எஸ்.எச்.எம்.வாஜித்)
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி நேற்று மாலை முசலி,அரிப்பு நவோதய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.இன் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுகளை முசலி பிரதேச செயலாளர் வசந்த குமார் ஆரம்பித்து வைத்தார்.

இன் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வின் (21)இன்று பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய கலந்து சிறப்பித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

எமது மாவட்ட விளையாட்டு கழக இளைஞர்கள்,யுவதிகள் மிகவும் திறமையானவர்களாக இருந்து வருகின்றார்கள். மேலும் எமது வீரர்களை இன்று பல திறமைசாளியாக மாற்ற பெற்றோர்கள்,குடும்ப உறவினர்கள், அரச அதிகாரிகள் கரிசனை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முசலி பிரதேச செயலாளர் தெரிவிக்கையில்;
மாவட்ட மட்ட விளையாட்டு போட்டி எமது பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறுவதையிட்டு நான் மிகவும் சந்தோஷம் அடைகின்றேன். எமது அழைப்பினை ஏற்று வருகை தந்த அரசாங்க அதிபர்,உதவி அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனமாந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். எனவும் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் அரசாங்க அதிபருக்கான பொன்னாடையினை அணிவித்து முசலி பிரதேச செயலாளர் கௌரவித்தார்.
2017ஆம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட வெற்றி கிண்ணத்தை மன்னார் நகர பிரதேச செயலகம் சுவிகரித்துக்கொண்டதுடன் இரண்டாவதாக மாந்தை பிரதேச செயகம் சுவிகரித்து என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கிராம உத்தியோகத்தர்கள் வாக்காளர் பதிவு செய்யவில்லையா? மேன்முறையீடு

wpengine

மன்னார் மீனவ சங்கங்களின் பிரச்சினை! தென்னிலங்கை மீனவர்கள் தொழிலை மேற்கொள்ள முடியாது அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

பேஸ்புக் சாட்டிங்! தொழிலதிபரின் வலையில் சிக்கிய பெண்

wpengine