பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்

மன்னார் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எஸ். சூசைதாசன் சோசை தனது 83வது வயதில் நேற்று மாலை காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானார்.

மன்னார் மாவட்டம் வங்காலை கிராமத்தை சேர்ந்த பி.எஸ். சூசைதாசன் சோசை தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில், 1977ஆம் ஆண்டு மன்னார் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவானார்.

அரசியல் அமைப்பின் 6ஆம் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு ஜூலை வன்முறையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும் 1983ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்திருந்தனர்.

மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்காத நிலையில், மன்னார் தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பி.எஸ்.சூசைதாசன் சோசை 1983ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி மன்னார் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்.

அதனைத் தொடர்ந்து சூசைதாசன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணில், மைத்திரி அரசுக்கு எதிராக மன்னார் தொடக்கம் ஆர்ப்பாட்டம்

wpengine

வங்கிகளுக்கு மாத்திரம், மே 2 ஆம் திகதி விடுமுறை

wpengine

கோட்டா பழைய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் தம்பல அமிர தேரர்

wpengine