செய்திகள்பிராந்திய செய்திமன்னார்விளையாட்டு

மன்னார் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி.

இன்று (2025/02/11) மன்னார் நகர சபை மைதானத்தில், உதவி மாவட்டச் செயலாளர் அவர்களின் தலைமையில், மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு ஸ்ரீஸ்கந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து வருகைதந்த அதிகாரிகள், நானாட்டான், மாந்தை, முசலி பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தேனி அமைப்பின் தலைவர், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப்பொதிகள்களும் வழங்கப்பட்டன.

Related posts

மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த அமைச்சர் வஜிர

wpengine

முல்லைத்தீவில்  ஏழு நாட்களாகக் காணாமல் போயுள்ள வயோதிப தாய் . .!

Maash

வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை.!

Maash