அரசியல்மன்னார்

மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்திய தமிழ் அரசுக் கட்சி…!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட இலங்கை தமிழ் அரசுக் கட்சி புதன்கிழமை (12) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான குழுவினர்  கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய  ஐந்து  உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

‘தமிழரசுக் கட்சிக்குள் ஒரு சில கோமாளிகள்’ சாணக்கியன்

Editor

மன்னாரில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலை உடைப்பு, ஒருவர் கைது..!

Maash

மன்னார்-நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து- அனைவரையும் கண் கலங்க வைத்த புகைப்படம்!!

Maash