உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அச்சுப் பதிப்பக உரிமையாளர்கள் ஆகியோருக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் இன்று காலை மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.ஏ.தர்ஸ பிரவீண தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள், மற்றும் மாவட்டத்தில் உள்ள அச்சு பதிப்பக உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தேர்தல்கள் ஆணைக்குழு 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரைக்குமான மூலோபாயத்திட்டத்திற்கு அமைவாக 2017 ஆம் ஆண்டு அமுலாக்கல் திட்டத்திற்கு அமைவாக குறித்த நிகழ்ச்சித்திட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது வாக்குரிமை,வாக்காளர் பதிவு மற்றும் வாக்களிப்பு போன்றவை தொடர்பாக தெழிவுபடுத்தியுள்ளதோடு, வாக்காளர்களின் பங்கீடுகள் மற்றும் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் போன்றவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்டத்தில் உள்ள 5உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் போது பிராந்திய ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புக்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.