பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்,சமுர்த்தி உதவி ஆணையாளர் நியமனம்.

(மயூரன்)

மன்னார் மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபராகவும்,சமுர்த்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும்,உலக உணவு திட்ட பணிப்பாளராகவும் கடமையாற்றிய ப.பவாகரன் கடந்த 29ஆம் திகதி உயர் கல்விற்காக வெளிநாடு சென்றதை தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்கு முசலி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய விக்கிரமசிங்க அரசாங்க அதிபரின் சிபாரிசின் பேரில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அதே போன்று சமுர்த்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக இவருடைய மனைவியும் நியமிக்கபட்டுள்ளதாகவும் தகவல் கிடைக்கபெற்றுள்ளது.இவரும் நானாட்டான் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நியமனம் பெற்று சுமார் 3வருடங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

நிறுவனங்களுக்கு கடன் இல்லை , மேலும் வங்கி அட்டை பயன்படுத்தி எரிபொருள் பெறமுடியாது .

Maash

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் இன,மத வேறுபாடின்றி தலைமன்னாரில் காணி பத்திரம்

wpengine

அமைச்சர் றிஷாட் பற்றி போலியான செய்திகளை வெளியிடும் இணையதளம்,சமுக வலைத்தளம்

wpengine