பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த நோர்வே நாட்டின் தூதுவர்!

மன்னார் மாவட்ட செயலகத்தில் நோர்வே நாட்டின் தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமேல் இருவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்டம் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மாவட்ட மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்தோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராமிய மட்ட உட்கட்டமைப்பு விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியுள்ளதுடன், தூதுவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இருவரும் கலந்துகொண்டிருந்தனர்.

District Media Unit

Related posts

வடக்கு கிழக்கில் சேதமடைந்த விகாரைகள் சமய தலங்களை புனரமைக்க நடவடிக்கை

wpengine

கல்முனை நகர மண்டபம் மாநகர சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

wpengine

வடக்கு அகதி முஸ்லிம்களுக்கு அமைச்சர், ஹக்கீம் பூச்சாண்டி காட்டுகிறார்.

wpengine