அரசியல்செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய ஹீனைஸ் பாரூக்!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிட இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தலைமையில் மன்னார் நகர சபை, மற்றும் மன்னார், நானாட்டான்,  முசலி, மாந்தை மேற்கு பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மன்னார் நகர சபை தேர்தலில் ‘தராசு’ சின்னத்தில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பிலும்,  ஏனைய மன்னார்,  நானாட்டான்,  முசலி மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தல்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மரச் சின்னத்திலும் போட்டியிட உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக் தெரிவித்தார்.

Related posts

முசலி பிரதேசத்தில் 50வீடுகள்! முதல் கட்டம் 11வீடுகள்

wpengine

பொலிஸ் சீருடை அணிந்து, 20 வயது யுவதியுடன் விடுதியில் தவறன உறவில் இருந்த பொலிஸ் சார்ஜன் பணி நீக்கம்..!

Maash

நுண்நிதி கடனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

Editor