பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்டத்தின் பஸார் பகுதி பாதுகாப்பான பிரதேசமாக காணப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தின் பஸார் பகுதி, தற்போது பாதுகாப்பான பிரதேசமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த  மன்னார் மாவட்டத் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர், மக்கள் அச்சமின்றி, உரிய சகாதார நடைமுறைகளுக்கு அமைவாக, மன்னார் பஸார் பகுதி மற்றும் நகர பகுதிக்கு வந்து, தமது நாளாந்தக் கடமைகளை மேற்கொள்ள முடியும் எனவும் கூறினார்.

மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், கடந்த (02) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், தற்போது வரை 182 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் இந்த மாதம், புதிய தொற்றாளர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை, மன்னார் மாவட்டச் சுகாதார துறையினருக்கு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 1132 சுகாதாரப் பணியாளர்களில், 980 பேருக்குத் தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

அத்துடன், மாவட்டத்தில் 86.5 சதவீதம் அடைவு நிலையை அடைந்துள்ளதாகவும் இது, வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் அதிகமான அடைவு நிலையில் உள்ளது எனவும், வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர் தெரிவித்தார்.

Related posts

“சகல மாணவர்களுக்கும் உயர்தரம் பிழையான முடிவு”

wpengine

கல்பிட்டி – பள்ளிவாசல்துறை பகுதியில் பஸ்-மஹேந்திரா வாகன விபத்து; ஒருவர் பலி இருவர் வைத்தியசாலையில்!

Editor

பாகிஸ்தான்,சியல்கோட் சம்பவத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

wpengine