பிரதான செய்திகள்

மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த ஜம்மியத்துல் உலமா சபை

மன்னார் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையினருக்கும், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.


மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மக்களின் நல்லுறவு தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்ற நோக்குடன் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட மாவட்ட ஜம்மியத்துல் உலமா அமைப்பினருடன், சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபுர்தீன், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாறுக் , மன்னார் மூர்வீதி மற்றும் உப்புக்குளம் பெரிய பள்ளிவாயில்களின் மௌலவிகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் இணைந்து மன்னார் மறைமாவட்ட ஆயருடன் குறித்த சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சந்திப்பின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஷ்டர் தினத்தில் நாட்டில் இடம் பெற்ற துக்ககரமான சம்பவத்திற்கு அனுதாபத்தையும் கண்டனத்தையும் மன்னார் ஜம்மித்துல் உலமா அமைப்பினர் மன்னார் மறைமாவட்ட ஆயரிடத்தில் தெரிவித்துக்கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்க மக்களுக்கு இடையிலான உறவு இத்தகைய துன்பகரமான செயலினால் சீர் கெட்டு விடக்கூடாதென்பதுடன், நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக பள்ளிவாயில்கள் , ஆலயங்களில் சமய சொற்பொழிவுகள் இடம்பெற வேண்டுமென ஆயரிடம் வேண்டுகோள் விடுத்ததுள்ளனர்.

மேலும் கடந்த காலங்களைப் போன்று இரு சமயத்தவர்களின் உறவு முறை எவ்வாறு இருந்ததோ அவ்வாறே தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

Related posts

ஈஸ்டர் தாக்குதலின் 4 வருட பூர்த்தியை நினைவுகூறும் மௌன அஞ்சலிக்கு பேராயர் அழைப்பு!

Editor

கிண்ணியா உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு சென்ற முன்னால் அமைச்சர்.

wpengine

அமைச்சர் றிஷாட் மீதான சதொச விசாரணை! இனவாதத்தை ஊதிப்பெருத்தும் நோக்கம்

wpengine