பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மட்டத்தில் 1 ஆம் மற்றும் 4 ஆம் இடத்தை பெற்று மடுக்கரை கிராம மாணவிகள்

-மன்னார் நிருபர் லெம்பட்-

வெளியாகி உள்ள 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமாக காணப்படும் மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் கலைப்பிரிவில் மன்னார் மாவட்ட மட்டத்தில் 1 ஆம் மற்றும் 4 ஆம் இடத்தை பெற்று மடுக்கரை கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவிகளான ஜெயரத்தினம் ஜெயப்பிரதா கலைப்பிரிவில் 3 A சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 1 ஆம் இடத்தினையும், இராமநாதன் புஸ்பலீனா கலைப்பிரிவில் 2 A, 1 B பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளனர்.

குறித்த மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து மிகவும் தூர பிரதேசமாக இருக்கும் தங்களுடைய கிராமத்தில் இருந்து நானாட்டான் பிரதேசத்தில் உள்ள டிலாசால் கல்லூரிக்கு சென்று கல்வி கற்றனர்.

குறித்த மாணவிகள் இருவரும் மாவட்ட மட்டத்தில் சிறந்த இடத்தை பெற்று தங்களுடைய கிராமத்திற்கும் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை தேடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவிடம் இருந்து ஹக்கீம் பணம் பெற்றார்! இன்னும் பல உண்மைகள் வெளிவரும் -நாமல் (வீடியோ)

wpengine

ஐ.நா. செயலாளர் பான்கீ மூனின் இலங்கை வருகையும், அதன் பின்னால் புதைந்துகிடக்கும் அமெரிக்க அரசியலும்

wpengine

இன்று மன்னாரில் பல இடங்களில் சோதனை

wpengine