Breaking
Sat. Apr 20th, 2024

District Media Unit

மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவனித் திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடன் இம்முறை இடம்பெறும் என மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் வெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம்¸ மடு அன்னையின் ஆவனித் திருவிழாவில் இம்முறை 150 பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மடுத்திருதத்லத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் மன்னார் ஆயர் இதனைத் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலாளர் அ.ஸ்ரான்லி டிமெல் தலமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில்¸ மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர்,மடுத்திருத்தலத்தின் பரிபாலகர்¸ சுகாதாரத்துறையினர்¸ பொலிஸார், இராணுவத்தினர்¸ கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

கொவிட் தொற்று நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் சுகாதார வழிமுறைகள்¸ கட்டுப்பாடுகளுக்கு அமைவாக திருவிழா ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.

மடு அன்னையின் வடாந்த ஆவனித் திருவிழா¸ எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறும். எதிர்வரும் ஆவனி 14ம் திகதி மாலை ஆறு மணிக்கு விசேட நற்கருணை ஆராதனை இடம்பெற்று¸ நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறும்.

மறுநாள்¸ காலை 6.15க்கு மடு அன்னையின் வருடாந்த ஆவனித் திருவிழா கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும். திருவிழாத்திருப்பலி சிலாபம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை தலமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

தமிழ்¸ சிங்கள மொழிகளில் மறையுறைகள் இடம்பெறும். திருவிழா தினத்தன்று மேலும் மூன்று திருப்பலிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

மடு அன்னையின் ஆவனித் திருவிழாவில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மாத்திரம் கலந்து கொள்ள முடியும்.

கொவிட் தொற்று பரவலை கருத்தில் கொண்டு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறை திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் வெர்னாண்டோ ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *