பிரதான செய்திகள்

மன்னார், மடு தேவாலயத்துக்கு வருகின்ற பக்தர்களுக்கு 300வீடுகள்

மன்னார், மடு தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் 300 வீடுகளை நிர்மானிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மடு தேவாலயத்துக்கு வருகின்ற பக்தர்களின் நலன் கருதி, அவர்களின் பயன்பாட்டுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

அத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவசியமான 300 மில்லியன் ரூபா நிதியை இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், குறித்த நிதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடப்பட உள்ளது.

இது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

உதாகம்மான ”எழுச்சி – அரச ஊழியா்கள் வீடமைப்புக் கிராமம்” – சஜித் பிரேமதாச

wpengine

“சு.கா வின் இருட்டறை இரகசியங்கள்”. முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா?

wpengine

அமைச்சர் றிசாத்தை மக்கள் சேவகனாக நாங்கள் பார்க்கின்றோம்! உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்

wpengine