பிரதான செய்திகள்

மன்னார் போக்குவரத்து சேவை பாதிப்பு! மாணவர்கள் பல விசனம்

ஜோசப்வாஸ் பிரதேசத்தில் இருந்து மன்னாரிற்கு இடையிலான அரச போக்குவரத்துச் சேவை தடைப்பட்டுள்ளது.

ஜோசப்வாஸ் பிரதேசத்தில் இருந்து மன்னாரிற்கு இன்று காலை (31) மாணவர்களை ஏற்றி செல்லும் போதே பேருந்து புதையுண்டமையினால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பிரதேசங்களில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்தள்ளது.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)

இதேவேளை, குறித்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து சென்று வேறு ஒரு பேருந்தில் மன்னாரிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வீதியானது நீண்டகாலமாக சீர் செய்யப்படாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

இதன் காரணமாக, போக்குவரத்துக்களை மேற்கொள்ளுவதில் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.625.0.560.320.500.400.197.800.1280.160.95

Related posts

டொலர் பிரச்சினை! தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு

wpengine

முசலி பிரதேச செயலாளரினால் இரண்டாம் மொழி சான்றிதழ் வழங்கி வைத்தார்.

wpengine

“புதிய மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்தில்” சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி…

Maash