மன்னாரில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ தலைமையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது ஜனாதிபதி செயலனி சிறு நீரக நோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் கடற்படையின் உதவியுடன் இன்று காலை உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் மற்றும் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பலிகக்கார ஆகியோர் இணைந்து திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை அப்பிரதேசத்து மக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதன் மூலம் சிறு நீரக நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இதன்போது மன்னார் மாவட்டத்தில் உயிர் பாதுகாக்கும் பயிற்சியான நீச்சல் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றுதல் மற்றும் அடையாள அட்டை போன்றவை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், கிராம மட்டத்தலைவர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், ஜனாதிபதி செயலனி சிறு நீரக நோய் தடுப்பு பிரிவின் வன்னி மாவட்ட இணைப்பாளர் சமிந்த பிரித்திவிராஜ் வாசன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.