மன்னார் சின்னக்கடையில் வசிக்கும் மார்ககண்டு மனோன்மணி என்பவர் 25-04-2016 மன்னார்
பொது வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக மருந்பெற்று கொள்ள சென்ற போது பரிசோதித்த வைத்தியர் ECGயினை மாலை 1-04க்கு எடுத்துள்ளார். சரியாக 39 நிமிடங்கள் கழித்து கே.மெற்றில்லடா என்பவருக்கும் ECG எடுக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் ECG எடுத்ததில் தப்பில்லை ஆனால் ம.மனோன்மணி என்பவருக்கு கே.மெற்றில்லடா என்பவரின் ECGயைப் பார்த்து வைத்தியர் றிப்போட் எழுதியுள்ளார்.
பரசிட்டமோலும் ,பனடோலும் மருந்தாக வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்த மனோன்மணி சினீயின் அளவும் பிறசர் அளவும் அதிகமாகி இருந்ததால் மயங்கி விழுந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தேறிவருகின்றார். மகன் சந்தேகப்பட்டு தாயாரின் ECG றிப்போட் மற்றும் டிஸ்கிறப்ஸன் வைத்தியரால் எழுதிக்கொடுக்கப்பட்ட மருந்து சீட்டினை பார்த்த போது தான் வியந்து போனார்.
மேலும் அவர் கூறுகையில்
இதே வேளை மெற்றில்லடா என்பவருக்கு சிறுநீரக அறுவைச்சிகிச்சையோ ஏதேனும் உறுப்பு அகற்றல் ஒப்ரேஸனாக இருந்தால் எனது தாயின் நிலமை என்னவாயிருக்கும் சற்று சிந்தித்துப்பாருங்கள் வைத்தியர்களே மருத்துவத்தாதிகளே பணியாளர்களே!
இதுமட்டுமல்ல மன்னார் பொதுவைத்தியசாலையில் வயோதிபர் கிளினிக்கீல் பல முறை அவர்களது கிளினிக் கொப்பிகள் மாறிய படியால் மருந்துகளும் மாறிக்கொடுக்கப்பட்ட மயங்கி விழுந்து சம்பவங்கள் இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கின்றது.
மக்களுக்கு பெரும்பாலும் மருந்துகளின் பெயரோ ECG றிப்போட் -ஸ்கான் றிப்போட் மற்றும் எக்ஸ்ரே றிப்போட் இன்னும் பல இவற்றினையெல்லாம் முழுமையாக பார்த்து விளங்கிக்கொள்ளும் அளவிற்கு மக்களின் ஆங்கிலப்புலமை இல்லை இதைக்கவனத்திற்கொண்டு மருத்துவர்கள் அதற்கான விளக்கத்தினை வழங்க வேண்டும். இல்லாமல் நீங்களே இவ்வாறான தவறுகளை தொடர்ச்சியாக செய்யும் போது மக்களின் உயிர்கள் ஒவ்வொன்றாக பறிபோய்க்கொண்டுதானிருக்கும் கணக்கில்லாமல் சிந்தியுங்கள்
தெய்வங்களுக்கு நிகராக உங்களை நினைக்கும் மக்களுக்கு நீங்கள் எப்படி இதய சுத்தியோடு
கடமையுணர்வோடு சேவையாற்ற வேண்டும் அல்லவா இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்தும்
நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் தெளிவாக இருக்க வேண்டும் மக்களின் விழிப்புணர்வு என்பது எங்கே உள்ளது.
இப்படியான சம்பவங்கள் நடப்பது சாதாரணம் என்று வாதாடும் புது வைத்தியர்களும் மன்னாரில்
தான் உள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
http://www.newmannar.com/2016/05/Mannar_20.html