பிரதான செய்திகள்

மன்னார் புதைகுழி! கூட்டமைப்பு அரசியல் செய்கின்றது

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கையை வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் நிராகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.

ஓய்வுபெற்ற நீதியரசர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது உண்மையிலேயே அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது.

மன்னார் புதைகுழி விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கிறது.

அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை தொடர்பாக அவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தரும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Editor

சஜித் விலகல்! டளஸ்சுக்கு ஆதரவு

wpengine

வாழைச்சேனை பகுதியில் இரண்டு சந்தேக நபர்களும் கைது

wpengine