பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் பிரதேச செயலகத்தினால் விடுத்துள்ள கோரிக்கை! கலாச்சார விழா

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச செயலகத்தின் 2021 ஆண்டுக்கான  கலாசார விழா, ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆண்டு தோறும் மன்னார் மாவட்டத்தின் சிறப்பை எடுத்துறைக்கும் விதமாக உருவாக்கப்படும் “மன்னல்” பிரதேச மலர் இம்முறையும் வெளியிடப்படவுள்ளது.

இதற்காக மன்னார் பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வளர்களின் ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

அவை, மன்னார் மாவட்டத்தின் சிறப்பையும் கலாசார, பண்பாட்டு அம்சங்களையும் எடுத்துக் கூறக்கூடிய ஆக்கங்களாகவும் நடு நிலைத் தன்மையுடையதாகவும் அமைந்திருதல் வேண்டும்.

ஆக்கங்களை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் மன்னார் பிரதேச செயலகத்தில் நேரடியாகவோ அல்லது கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மன்னார் எனும் முகவரிக்கோ அல்லது abimahathy18@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள், பிரதேச மலர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, “மன்னல்” நூலில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசின் பங்காளி கட்சியாக இருக்கின்றது.மஸ்தான்

wpengine

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம்.

wpengine

மத்திய வங்கி மக்களை ஏமாற்றிவிட்டதா?

Editor