“நமது பாரம்பரியத்தை பேணுவோம் சேமிப்புக்கு வழிகோருவோம்” என்ற தொனிப் பொருளோடு தமிழ்,சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வானது நேற்றைய தினம்(29.04.2018)மன்னார் வடக்கு சமுர்த்தி வங்கியினால் நடத்தப்பட்டது.
சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டுச்சபை உறுப்பினர்கள், சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர்கள் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் .
இதன் போது பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.