(தமிழ்வின் இணையம்)
மன்னார் நகர பிரதேசச் செயலகத்தின் திட்டமிடல் கிளைப் பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் வீட்டுத்திட்டம் தொடர்பில் முறைகேடாக செயற்பட்டமை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு தற்போது குறித்த செயலகத்தின் நிர்வாக கிளைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் தற்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் ‘சைபர் பட்ஜட் வீட்டுத்திட்டம்’ பயனாளிகள் தெரிவு பேசாலை பகுதியில் இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டோர். மேலதிக சிபாரிசின் பேரில் இணைத்துக்கொள்ளப்பட்ட 19 பயனாளிகளில் 13பயனாளிகள் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு புள்ளி இடப்பட்ட பெயர் விபரத்தை முகவரி அற்ற முகநூல் மற்றும் இணையத்தளத்தில் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதும் அல்லாமல் உத்தியோகத்தர்களை விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.
2014ஆம் ஆண்டு இந்திய வீட்டுத்திட்டத்தில் குறித்த மன்னார் பிரதேசச் செயலக திட்டமிடல் கிளைப்பிரிவில் செயற்பட்ட குறித்த உத்தியோகத்தரின் செயற்பாட்டின் காரணமாக பயனாளிகள் புறக்கணிக்கப்பட்டு வீட்டுத்திட்டம் கிடைக்காமைக்கு ஒரு காரணமாகும் என பாதிக்கப்பட்ட பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டுத்திட்ட பிரச்சினைகள் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையின் போதும் மன்னார் பிரதேச செயலகத்திலும் பேசாலை கிராமத்திலும் கடமை ஆற்றியவர்களை மனித உரிமை ஆணைக்குழு நேரடியாக குற்றம் சுமத்தி எழுத்து மூலமான அறிக்கையை மன்னார் மாவட்ட செயலகத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.
விசாரணையின் போது நேரடியாக தலைகுனிவை சந்தித்த குறித்த உத்தியோகத்தர் தெரிவில் புறக்கணிக்கப்பட்ட பயனாளிகளிடம் நீங்கள் வீட்டுத்திட்டம் பெறும் கெட்டித்தனத்தை பார்ப்போம் என்று அத்தருணத்தில் சவால் இட்டிருந்தது சுட்டிக்காட்டப்பட வேண்டிய தொன்றாகும்.
இதே வேளை தற்போது வழங்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தில் தாம் எந்த அதிகாரமும் செலுத்த முடியாத காரணத்தால் வீட்டுத்திட்டத்தை குழப்பும் நோக்கோடு செயற்பாட்டுள்ளார்.
மன்னார் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவில் கடமையாற்றிய குறித்த உத்தியோகத்தர் முறைகேடாக செயல் பட்டு சில நாட்கள் கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டு தற்போது நிர்வாக பிரிவில் கடமையாற்றி வருகின்றார்.
திணைக்கள ஆவணத்தை திருட்டுத்தனமாக திணைக்களத்தின் கடவுச் சொல்லை பெற்று குறித்த உத்தியோகத்தரின் மின்னஞ்சல் மூலம் உத்தியோக பூர்வமற்ற இணையத் தளத்திற்கு வழங்கியமை தொடர்பாக சட்ட நடவடிக்கையை மன்னார் பிரதேச செயலகம் மேற்கொள்ளாமை குறித்து அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசனத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் நிர்வாகத்திற்குள் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.