பிரதான செய்திகள்

மன்னார் நானாட்டானில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறிய நிலையில்,ஒரு குழுவை சேர்ந்தவர்கள் மற்றைய குழுவின் நபர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர்.

இதன் போது படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தர், நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசித்து வந்த 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடா்பில் முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உக்ரைன் ஆக்கிரமிப்பு, உலக பொலிஸுக்கு எச்சரிக்கை?

wpengine

அமைச்சர் ஹக்கீம் விசாரணை செய்யப்படலாம்

wpengine

இன்று ஏட்பட்ட வாகனவிபத்தில் இளைஞன் பலி.!

Maash