பிரதான செய்திகள்

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு

கடந்த அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 95% மானியம் என்ற அடிப்படையில் திவிநெகும திணைக்களத்தின் ஊடாக மிகவும் கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் ஆட்டு பட்டி அமைத்தல்,தண்ணீர் இரைக்கும் இயந்திரம்,கோழி கூடு அமைத்தல் போன்ற இன்னும் முக்கிய வாழ்வாதத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 40 லச்சம் ரூபா பணம் செலவு செய்யாமல் பிரதேச செயலாளர் மற்றும் சமூர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஆகியோரின் அசமந்த போக்கின் காரணமாக உரிய பயனாளிகளுக்கு இதுவரைக்கும் வாழ்வாதாரம் சென்று அடையவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உரிய பயனாளிகளுக்கு நேரடியாக பொருற்களை   கொடுக்காமல் கிராம மட்டத்தில் உள்ள அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்தன் காரணமாக பாரிய ஊழல் மோசடியும் இடம்பெற்று இருக்கலாம் என  பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி பயனாளிகளுக்குரிய வாழ்வாதாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுவிக்கின்றனர்.

Related posts

ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் மேலும் இருவர் மரணம்

wpengine

NPP வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மிரட்டும் அமைச்சர்கள் – சத்தியலிங்கம்

Maash

விக்னேஸ்வரனை கண்டுகொள்ளாத அரசாங்கம்! பொதுபல சேனாவுடன் தொடர்பு இல்லை

wpengine