பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் நகர சபை ஊழியரின் அசமந்தபோக்கு! இரானுவ சாவடி சேதம்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனை சாவடி மீது மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் வாகனம் நேற்றையதினம் மோதுண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.


மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் வாகனம் மன்னார் நகரில் கழிவுகளை சேகரித்து பாப்பாமோட்டை பகுதியில் மன்னார் நகர சபைக்கு சொந்தமான மீள் சுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள பிரதான இராணுவ சோதனை சாவடி மீது கட்டுப்பாட்டை மீறி மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.


குறித்த வாகனத்தில் ஏற்பட்ட பழுது காரணமாகவே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தின் போது சோதனை சாவடிக்கு என வீதியில் அமைக்கப்பட்ட இராணுவ வீதித் தடைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சோதனை சாவடியில் வாகனங்கள் பதிவு செய்யப்படும் பகுதி முழுவதும் சேதம் அடைந்துள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உத்தரவு வழங்கிய உடனேயே காணிகள் விடுவிக்கப்பட்டதா ?

wpengine

இந்துநோசியாவில் 6.6ரிச்டர் நீல நடுக்கம்! இலங்கை பாதிக்குமா?

wpengine

ஜனாதிபதியின் பிரகடனம் வாபஸ் பெறப்பட்டால் வனப்பகுதிகள் அழியும்! ஒரு போதும் இடமளியோம்- சாகர தேரர்

wpengine