பிரதான செய்திகள்

மன்னார் நகர இணக்க சபை உறுப்பினர்களுக்கான நியமனம்

மன்னார் நகர மத்தியஸ்தர் சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைத்தல் மற்றும், புதிய மத்தியஸ்தர் சபை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, மன்னார் நகர மத்தியஸ்தர் சபைக்கு 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தலைவராக எம்.சிவானந்தன் நியமிக்கப்பட்டுள்ளதோடு, உப தலைவராக நிஸாந்தினி ஸ்ரான்லி ஜோஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக்கடிதங்களை மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் எஸ். பரமதாஸ் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்துள்ளனர்.

Related posts

துரிதமாக கையாளப்பட வேண்டிய விடயத்தை ஆற அமர கையாளும் மு.கா

wpengine

மன்னார்-கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதி தனிமைப்படுத்தல்

wpengine

இரண்டு பதவிகளையும் இராஜினாமா செய்தார் அசாத் சாலி

wpengine