பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் நகரில் சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம்- எம்.பிரதீப்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் கொவிட்-19 தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

கொவிட்- 19 தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் மன்னார் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்படுபவர்களின் தேவைகள் தொடர்பாக உரிய கிராம அலுவலர்களினால் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் வீட்டுக்கு   கிராம அலுவலர்களினால் உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்படுகின்றது. 

இந்த வருடத்தில் இது வரை 210 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் கிடைக்காது இருப்பின் கிராம அலுவலர்களுடன்   தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளவும். மேலதிக தொடர்புகள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் 023-2222238 என்ற தொலைபேசி இலக்கம் ஊடக  மன்னார் நகர பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நாட்டில் கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்க ‘கல்வி பேரவை’ ஒன்றை நிறுவ அரசாங்கம் தயார் . !

Maash

தமிழ்மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை

wpengine

வடக்கில் மீண்டும் தொடரும் ஊடரங்கு சட்டம்

wpengine