செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் நகரசபை தலைவருக்கு எதிராக, நகரசபையின் முன்னாள் தலைவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

மன்னார் நகரசபையின் தலைவர் டானியல் வசந்தனுக்கு எதிராக நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் நகர சபையின் புதிய தலைவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கடந்த காலங்களில் மன்னார் நகர சபையின் பண்டிகை கால கடைகள் ஒதுக்கீடு மற்றும் 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்கும் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்க இலஞ்சம் பெற்றதாகவும் அவற்றில் ஊழல் இடம்பெற்றதாகவும் அது தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டில் எந்த வித உண்மையும் இல்லை எனவும் பகிரங்க குத்தகை மூலம் இடம் பெற்ற விற்பனையில் எந்த ஒரு ஊழலும் இடம் பெறாத நிலையில் வேண்டும் என்று தங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அதே நேரம் தனிப்பட்ட உள் நோக்கம் கருதி மன்னார் நகரசபை தலைவர் ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்துள்ளதாகவும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்படி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக பல்வேறு அரச குழுக்கள் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய நிலையில் இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வரும் நிலையில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த மன்னார் நகரசபை புதிய தலைவருக்கும் தனக்கும் முன்னதாகவே தலைவர் தெரிவின் போது கருத்து வேறுபாடுகள் நிலவிய நிலையில் வேண்டும் என்று முன்னாள் நகரசபை தவிசாளர் தன் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைத்து வருகின்றமையின் அடிப்படையில் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

டி-56 ரக துப்பாக்கி குறித்த தகவல்களை வழங்கினால் 10 லட்சம் ரூபாய் வரை பணப் பரிசில் வழங்கப்படும் 

Maash

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருகைதர வேண்டாம்.

wpengine

வவுனியாவில் காணிப்பிரச்சினை! மக்களை ஏமாற்றிய மைத்திரி

wpengine