பிரதான செய்திகள்

மன்னார்-தாழ்வுபாடு 396 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு

மன்னார் – தாழ்வுபாடு கடற் பிராந்தியத்தில் இன்று அதிகாலை 396 கிலோ கிராம் மஞ்சள் கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .


இன்று அதிகாலை மன்னார் தாழ்வுபாடு கடற்பிராந்தியத்தில் கடற்படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்றிலிருந்து 396 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்களத்திடம் கடற்படையினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது .


எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் போதைப்பொருட்களுடன் ஐவர் கைது!

Editor

ஐபோன் வாங்குவதற்காக குழந்தையை விற்ற சீன தம்பதியினருக்கு தண்டனை

wpengine

முசலி சமுர்த்தி வங்கி முகாமையாளர் மீது குற்றச்சாட்டு! விசாரணை ஆரம்பம்

wpengine