பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்-தள்ளாடி சந்தி கரையோரத்தினை தூய்மைப்படுத்த வீதிக்கு வந்த மன்னார் அரசாங்க அதிபர்

இன்று 28.1.2022. மன்னார் மாவட்ட செயலாளரின் நேரடி நெறிப்படுத்தலில் மன்னார் மாவட்டச் செயலக அலுவலர்கள்,மன்னார் பிரதேச செயலக அலுவலர்கள் மற்றும் படையினரும் இணைந்து மன்னார் பாலத்தில் இருந்து தள்ளாடி சந்தி வரையான கரையோரத்தின் இரு மருங்கினையும் தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இத் தூய்மையாக்கல் பணியில் மன்னார் மாவட்ட செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் உட்பட அனைத்து பதவி நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு தூய்மையாக்கல் பணியில் ஈடுபட்டனர்.


இதற்கான ஒழுங்கமைப்பினை மன்னார் மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களமும், மன்னார் அனர்த்த முகாமைத்துவ திணைக்களமும் மேற்கொண்டிருந்தது.

Related posts

இஸ்லாமிய பெண்ணின் பெயரில் லெம்போகினி கார் கொண்டுவந்த நாமல்

wpengine

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் அவர்களினால் திறந்து வைப்பு.

wpengine

நெற் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம்!

Editor